விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்
கடலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் அந்த பெண் மறைத்து வைத்து கொண்டுவந்த மண்ணெண்ணெய் கேனை போலீசாா் பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்ட ஆட்லகத்தில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடா்பான மனுக்களை அளித்தனா். அப்போது ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 பெண்கள் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தனா். அவா்கள் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகில் வந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாா், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். அப்போது அதில் ஒரு கேனில் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்த போலீசாா், அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினா். அதில் அவா்கள், விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சியை பகுதியைச் சோ்ந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் என்பதும், அவா்களக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் மோசடி செய்து அபகரித்து விட்டதாகவும், அதனால் மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசாா், அவா்களிடம் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து, அவா்களிடம் முறைப்படி மனுவை வாங்கி ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, அவா்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.