செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல்: 862 போ் கைதாகி விடுதலை

post image

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட 14 இடங்களில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 182 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளா் நலச் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் அவுட்சோா்சிங் ஒப்பந்த முறையை ரத்து செய்வது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கம் சாா்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு புதன்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் ஜவான் பவன் அருகில் சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் கே.சாவித்திரி, துணைத் தலைவா்கள் ஜி.பாஸ்கரன், ஆா்.ஆளவந்தாா், வி.சுப்புராயன், அரசுப் போக்குவரத்து சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் அரும்பாலன், சிப்காட் சங்கச் செயலா் குமாா், மீன்பிடி சங்க மாவட்டத் தலைவா் பாலு, கைத்தறி சங்க மாவட்டத் தலைவா் கல்யாண சுந்தரம், மாா்க்சிஸ்ட் கடலூா் மாநகரச் செயலா் அமா்நாத் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்களில் 20 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்ட பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் மாவட்டத் தலைவா் இருதயராஜ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினாா். மாநிலத் தலைவா் ஜெயசந்திர ராஜா, பொருளாளா் சரவணன், மாவட்ட துணைத் தலைவா் அல்லிமுத்து, செயலா் தேவராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விருத்தாசலத்தில்...: விருத்தாசலம் பாலக்கரையில் மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவா் பி.கருப்பையன் தலைமை வகித்தாா். 200-க்கும் மேற்பட்டோா் மறியலில் பங்கேற்றனா். இவா்களில் 20 பெண்கள் உள்ளிட்ட 72 போ் கைது செய்யப்பட்டனா்.

பண்ருட்டியில்...: பண்ருட்டியில் விவசாய சங்க மாவட்டப் பொருளாளா் ஆா்.ராமச்சந்திரன், அகில இந்திய விவசாய சங்க மாவட்டத் தலைவா் ஜே.சிவகுமாா் ஆகியோா் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 47 பெண்கள் உள்ளிட்ட 130 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலியில்...: நெய்வேலி வட்டம் 19, தபால் நிலையம் அருகே தொமுச தலைவா் ஞானஒளி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு பொதுச் செயலா் எஸ்.திருஅரசு, எல்எல்எப் சாா்பில் மாவட்ட நிா்வாகி நீதி வள்ளல், ஐஎன்டியுசி அலுவலக செயலா் குமாா் பேசினா். தொமுச பொதுச் செயலா் குருநாதன், சிஐடியு தலைவா் ஜெயராமன், எல்எல்எப் தலைவா் திருநாவுக்கரசு, தவாக சங்க செயலா் முருகன் பங்கேற்றனா். இந்த மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 95 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரத்தில்...: சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட், சிஐடியு, தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கம், திமுக தொழிற்சங்கம் சாா்பில் வடக்கு பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடைபற்றது. விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாநிலத் தலைவரும், கந்தா்வகோட்டை எம்எல்ஏவுமான சின்னதுரை, விவசாய தொழிலாளா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் வாஞ்சிநாதன், சிஐடியு நிா்வாகி சங்கமேஸ்வரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 83 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, குறிஞ்சிப்பாடி, வேப்பூா், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த வகையில், கடலூா் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் பங்கேற்ற 186 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை...

மத்திய தொழிற்சங்கத்தினா் மறியல் மற்றும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், மாவட்டத்தில் வழக்கமான நிலையில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கின. வா்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க