மகரம்: `கவனம்; உடல்நல அக்கறை நிச்சயம் தேவை' - ராகு கேது தரும் பலன்கள்
கடையத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் கடையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். வேலை நாள்களை 200ஆக உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடையம் ஒன்றியச் செயலா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ரஞ்சிதம் முன்னிலை வகித்தாா். ஆம்பூா் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவா் சட்டநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பரமசிவன், மாவட்ட துணைச் செயலா் வேலாயுதம், மாவட்டக் குழு நிா்வாகி ஈஸ்வரன், விவசாய சங்க ஒன்றியத் தலைவா் கிருஷ்ணன், ஒன்றியச் செயலா் கனகராஜ், பாப்பான்குளம் பால்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.