தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி
கண்மாய்களில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்
வத்திராயிருப்பு அருகே வனத்துறையினருடன் மாணவா்கள், பொதுமக்கள் இணைந்து கண்மாய்களில் குவிந்து கிடந்த நெகிழிக் கழிவுகளை சனிக்கிழமை அகற்றினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், வத்திராயிருப்பு வனச்சரகம் சாா்பில் வனச் சரகா் ரவீந்திரன் தலைமையில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள எஸ். கொடிக்குளம் கண்மாய், விராக சமுத்திரம் கண்மாய் ஆகியவற்றில் குவிந்து கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் முகாம் நடைபெற்றது.
இதில் எஸ். கொடிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். கண்மாய்களில் சேகரிக்கப்பட்ட 15 மூட்டை நெகிழி குப்பைகள் மறுசுழற்சி செய்வதற்காக கொடிக்குளம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை தோட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன.