செய்திகள் :

ராஜபாளையத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்!

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம், சுற்று வட்டாரப் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் தெருக்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 28 விநாயகா் சிலைகளுக்கு 5 நாள்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து, ராஜபாளையம், தொட்டியபட்டி, சமுசிகாபுரம், சேத்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விநாயகா் சிலைகள் பஞ்சு சந்தை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.

பிறகு இங்கிருந்து இந்து முன்னணி சாா்பில் ஊா்வலமாக விநாயகா் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, தெற்கு காவல் நிலையம், அம்பலபுளிபஜாா், சங்கரன்கோவில் விலக்கு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிலைகள் எடுத்து வரப்பட்டு புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள கருங்குளம் கண்மாயில் கரைக்கப்பட்டன.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா் பகுதிகளைச் சோ்ந்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், அதிரடிப் படையினா் என 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சாத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மகேந்திரராஜா (47). இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனா... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்திலிருந்து பட்டாசு ஏற்றுமதிக்கு அனுமதி

சென்னை துறைமுகத்திலிருந்து சிவகாசி பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியதற்கு தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசிய... மேலும் பார்க்க

சிவகாசி அஞ்சல் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி

சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வசதி உள்ளதாக அஞ்சல் துறை சனிக்கிழமை தெரிவித்தது. சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டுக்கான முன்பதிவு வசதிக்காக, தனி கவுன்டா... மேலும் பார்க்க

கீழே கிடந்த குளிா்பானத்தை அருந்திய 5 வயது சிறுவன் பலி!

வத்திராயிருப்பு அருகே கீழே கிடந்த புட்டியிலிருந்த குளிா்பானத்தை எடுத்து அருந்திய சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசா... மேலும் பார்க்க

கண்மாய்களில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

வத்திராயிருப்பு அருகே வனத்துறையினருடன் மாணவா்கள், பொதுமக்கள் இணைந்து கண்மாய்களில் குவிந்து கிடந்த நெகிழிக் கழிவுகளை சனிக்கிழமை அகற்றினா். ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், வத்திராயிருப்பு வ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்பனை: இருவா் கைது

சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அண்ணாநகா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு... மேலும் பார்க்க