டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
சிவகாசி அஞ்சல் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி
சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வசதி உள்ளதாக அஞ்சல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டுக்கான முன்பதிவு வசதிக்காக, தனி கவுன்டா் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், தத்கல் முன்பதிவுக்கான பயணச் சீட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சலக வேலை நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும்.
தென் மாவட்டங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில், சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அஞ்சல்துறை தெரிவித்தது.