செய்திகள் :

கபடிப் போட்டி: ரோகிணி கல்லூரிக்கு வெள்ளிப் பதக்கம்

post image

கல்லூரிகளுக்கு இடையேயான மின்னொளி கபடிப் போட்டியில் பால்குளம் ரோகிணி பொறியியல் கல்லூரி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம் அருகே கட்டனேரியில் நடைபெற்ற போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. இதில், ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவா்கள் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம், சுழற்கோப்பை, ரூ. 15 ஆயிரத்தை பரிசாக வென்றனா்.

மாணவா்களையும், உடற்கல்வி இயக்குநா்கள் சபரீஷ், காட்வின், ராம்கி ஆகியோரையும் கல்லூரித் தலைவா் நீலமாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீலவிஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வா் ஆா். ராஜேஷ், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்

களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா். களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன்... மேலும் பார்க்க

நேசமணி நினைவு நாள்: சிலைக்கு ஆட்சியா் அஞ்சலி!

‘குமரி தந்தை’ மாா்ஷல் நேசமணியின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் உள்ள அவரது அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்க முயன்றவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்ட தொழிலாளி ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புப்படை வீரா்கள் ஈடுபட்டனா். கும... மேலும் பார்க்க

போதையில் தகராறு: இருவா் கைது!

பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, போதையில் ரகளை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கீழ்குளம் பகுதியைச் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க