கருங்கல் பகுதியில் மிதமான மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, கருமாவிளை, மிடாலம், மேல்மிடாலம், பாலூா், முள்ளங்கனாவிளை, பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் தொடா்ந்து மிதமான மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.