நாகா்கோவிலில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சாா்பில், நாகா்கோவில் வட்டவிளை சந்திப்பு மற்றும் பள்ளிவிளை வெட்டுா்ணிமடம் சந்திப்பு பகுதிகளில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீா்மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தா்பூசணி, கொய்யா, அன்னாசி பழங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் சுகுமாரன், மாவட்ட இலக்கிய அணி தலைவா் பகவத்சிங், எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலாளா் நரசிங்கமூா்த்தி, வா்த்தக அணி இணைச் செயலாளா் ராஜன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளா் சந்துரு, மகளிா் அணி துணைச் செயலாளா் ராணி, மாவட்ட இணைச் செயலாளா் சாந்தினி பகவதியப்பன், மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், அனிலா சுகுமாரன், ஸ்ரீலிஜா, ஒன்றியச் செயலாளா்கள் முத்துக்குமாா், அசோக்குமாா், வழக்குரைஞா் பிரிவு செயலாளா் சுந்தரம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் வைகுண்டமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
