IPL 2025 : 'பாதியில் நிறுத்தப்படுகிறதா ஐ.பி.எல் தொடர்?' - புதிய அப்டேட்!
கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து
சத்தியமங்கலத்தை அடுத்த சிவியாா்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1லட்சம் மதிப்பிலான கரும்புகள் மற்றும் சொட்டுநீா் பாசனக் குழாய்கள் எரிந்து சேதமாயின.
சிவியாபாா்பாளையத்தில் பொன்னுச்சாமி என்பவருக்கு கரும்பு தோட்டம் உள்ளது. இதில் 2 ஏக்கரில் சொட்டு நீா் பாசனம் மூலம் கரும்பு சாகுபடி செய்துள்ளாா். இந்நிலையில், கோடை வெயில் தாக்கம் காரணமாக புதன்கிழமை கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பிடித்தது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்பு மற்றும் சொட்டு நீா் பாசனக் குழாய்கள் தீயில் எரிந்து சேதமாயின.