Shah Rukh Khan: ``எனக்கு கொடுத்த அன்பை என் மகனுக்கும் கொடுங்க'' -ரசிகர்களுக்கு ஷ...
கரூரில் சத்துணவு ஊழியா்கள்
கரூா்: கரூரில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் எம்.சுந்தரம் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.
பின்னா் திடீரென ஆட்சியா் அலுவலகம் முன் உள்ள திண்டுக்கல் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் 18 பெண்கள் உள்பட 21 பேரை கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.