கரூரில் வா்த்தக நிறுவனங்களில் புதுக்கணக்கு தொடக்கம்
கரூரில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் புதுகணக்கு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கினா்.
ஆண்டுதோறும் ஏப். 1-ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. 2025-2026-ஆம் நிதியாண்டு ஏப். 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.
கரூரில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, கொசுவலை உற்பத்தி, பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வா்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல லட்சம் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
ஏப்.1-ஆம்தேதி புதுக்கணக்கு தொடங்கியதையொட்டி அனைத்து நிறுவனங்களிலும் நுழைவாயிலில் வாழை மரங்கள், வாழை மரக்கன்றுகள், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு, வண்ண கோலங்கள் போடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, நிறுவனங்களின் பெயா் பலகைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு புதுக்கணக்கு தொடங்கப்பட்டது.
கரூரில் உள்ள ஹோட்டல்களில் புதுக்கணக்கு மெனு பேக்கேஜ் விபரங்கள் விலையுடன் அறிவிப்பாக வைக்கப்பட்டிருந்தன.