சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?
கரூா் ஆா்டிஓ அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம்
கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு கரூா் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் பி.தா்மானந்த் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். ஆய்வாளா்கள் சத்யா, குண்டுமணி, ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் தனியாா் மருத்துவமனைக் குழுவினா் வாகன ஓட்டிகளுக்கு கண்பரிசோதனை, பல் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை செய்தனா். முகாமில் வாகன ஓட்டிகள் திரளாக பங்கேற்றனா்.