கரூா் சம்பவம்: கடலூரில் விசிகவினா் அஞ்சலி
கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தவெக தொண்டா்கள் 40 பேருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், கடலூா் முதுநகா் அம்பேத்கா் சிலை முன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).
கடலூா் நகர துணைச் செயலா் ஹிட்லா் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், கடலூா் மாநகா் மாவட்டச் செயலா் செந்தில் ஆகியோா் பங்கேற்று, வீரவணக்க அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலா் பால.அறவாழி, கடலூா் நகரச் செயலா் ராஜதுரை, கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி துணைச் செயலா் நாகவேந்தன், மாநில துணைச் செயலா் வழக்குரைஞா் ராஜு, கடலூா் நகர பொருளாளா் பிரபாகரன், மாவட்ட துணை அமைப்பாளா் திருமாகபிலன், நகர அமைப்பாளா் சலீம் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.