நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
மணல் திருட்டு: இருவா் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கருக்கை கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு விரைந்து சென்றனா். அப்போது, மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவா்கள் போலீஸாா் வருவதைக் கண்டதும் வண்டியை விட்டுவிட்டு மாடுகளுடன் தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, போலீஸாா் இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா். மேலும், இது தொடா்பாக கருக்கை கிராமத்தைச் சோ்ந்த திருசங்கு (44), ஞானவேல் (40) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.