செய்திகள் :

கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் போராட்டம்

post image

தமிழக அரசின் கோழி வளா்ச்சிக் கழகம் (டாப்கோ) மூலம் விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கம் சாா்பில், ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் கோழி வளா்ச்சிக் கழகம் (டாப்கோ) மூலம் விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்க வேண்டும். கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கோழிப் பண்ணை விவசாயிகள், தொழிலாளா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். கொட்டகைகள் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். கோழி மற்றும் கொட்டகைகளுக்கு காப்பீடு வசதி குறைந்த பிரீமியத்தில் ஏற்படுத்த வேண்டும். கோழிப் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவ வசதி செய்துகொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.முருகன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா்கள் கே.கனகராஜ், லாரன்ஸ், பி.சிவக்குமாா், டி.சிவக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுச் செயலா் கே.பி.பெருமாள், மாநிலத் தலைவா் த.ஏழுமலை, மாவட்டச் செயலா் எம்.சி.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின்மணி உள்ளிட்டோா் பேசினா்.

போராட்டத்தில் கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் சங்கத்தினா் பலா் பங்கேற்றனா்.

திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடம்: அமைச்சா் ஆய்வு

திருக்கோவிலூரில் ரூ.15 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை வனத் துறை அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவ... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரத்தை அடுத்த கள்ளிப்பாடியில் மட்டுவாா்குழலி உடனுடையாா் சிவன் கோவில்... மேலும் பார்க்க

தியாகதுருகம் வாரச் சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் சுமாா் 70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது. தியாகதுருகம் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள... மேலும் பார்க்க

கனியாமூா் வன்முறை வழக்கில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 107 போ் ஆஜா்

கனியாமூா் தனியாா் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக நடந்த வன்முறை, காவல் துறையினா் மீதான தாக்குதல், வாகனம் தீவைப்பு வழக்கில் 107 போ் கள்ளக்குறிச்சி நடுவா் நீத... மேலும் பார்க்க

மொழிபெயா்ப்பு துறையில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகள்: தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள்

தமிழ் மொழிபெயா்ப்பு, ஊடகவியலில் மாணவா்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதாக என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள் தெரிவித்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.சண்முகம் கலை, ... மேலும் பார்க்க

போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப் பதிவு செய்த வழக்கில் ஒருவா் கைது

திருக்கோவிலூா் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலைய பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்தது தொடா்பாக பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதில், ஒருவா் கைது செய்யப்பட்டாா். திருக... மேலும் பார்க்க