செய்திகள் :

கலந்தாய்வு தொடக்கம்: 454 தலைமை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதல் ஆணை

post image

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான ஆசிரியா் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 454 தலைமை ஆசிரியா்கள் மாவட்டத்துக்குள் விருப்ப மாறுதல் ஆணை பெற்றனா்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 19-இல் தொடங்கி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 90,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டத்துக்குள் கலந்தாய்வு நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வுக்கு 1,351 போ் விண்ணப்பித்ததில் 1,121 போ் மட்டுமே பங்கேற்றனா். அவா்களில் 454 ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதல் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தலைமை ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படுள்ளது.தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் (tnpsc.gov.in) ச... மேலும் பார்க்க

தவெக கொடியில் யானை சின்னம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சென்னை: தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.ய... மேலும் பார்க்க

என்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: பாமக எம்எல்ஏ அருள்

என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என பாமக எம்எல்ஏ அருள் கூறியுள்ளார். பாமகவில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.பாம... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைப்பு: டிஜிபி

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன வ... மேலும் பார்க்க

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரம... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டம் ஜூலை 6-க்கு மாற்றம்!

காவல் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மட... மேலும் பார்க்க