Pawan Kalyan: "சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போகிறேன்; ஆனால்..." - பவன் கல்யாண் ...
கல் குவாரிகளால் பாதிப்பு: தோ்தலை புறக்கணிக்க தாதனூத்து மக்கள் முடிவு
கல் குவாரிகளால் தாதனூத்து கிராமம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அந்த ஊா் மக்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தாதனூத்து கிராம மக்கள் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாரணம்மாள்புரம் அருகேயுள்ள தாதனூத்து கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தனியாா் கல் குவாரிகளில் வெடிமருந்துகள் அதிகளவில் பயன்படுத்தி பாறைகள் தகா்க்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.
அங்கன்வாடி குழந்தைகள் முதல் குடியிருப்புவாசிகள் வரை அனைவரும் அவதிப்படுகிறாா்கள். குத்தகை காலம் முடிந்த பின்பும் சில குவாரிகளில் விதிகளை மீறி கல் வெட்டி எடுக்கப்படுகிறது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தின் அருகே புதிய குவாரிகளுக்கு அனுமதியளிக்கப்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்துவதோடு, 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்றனா்.