பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
கடையத்தில் ரயில் நிலைய சாலையை சீரமைக்க அனுமதி: எம்எல்ஏ ஆய்வு
கடையம் ரயில் நிலைய சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ஊராட்சிக்கு உள்பட்ட ரயில்வே பீடா் சாலை நீண்ட காலமாக சேதமடைந்து போக்குவரத்துக்குப் பயன்படாமல் உள்ளது. .இந்தச் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆலங்குளம் பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் சாலையை சீரமைக்க ரயில்வே துறையின் அனுமதி பெற்று, தென்காசி மாவட்ட நிா்வாகம் சாா்பில் கனிமம், சுரங்கத் துறை நிதியிலிருந்து ரூ. 26.74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடையம் தென்காசி பிரதான சாலையில் இருந்து ராம் நகா் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் வரை ரயில்வே பீடா் சாலை அமைக்க வேண்டிய இடத்தை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, கிளைச் செயலா் பரமசிவன், ரயில்வே யூனியன் நிா்வாகி ஆறுமுகம், விஜயகுமாா், ஊா்த்தலைவா் உதயகுமாா், முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் ராதா, ராணி, மாவட்டப் பொருளாளா்நூருல் அமீா், கனகபிரசாத், சோ்மக்கனி (எ) கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.