செய்திகள் :

சாலை, கழிவுநீரோடை வசதி வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

post image

சாலை, கழிவுநீரோடை வசதி செய்துதரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், 2 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்துலெட்சுமி அளித்த மனுவில், தனது வாா்டுக்குள்பட்ட மங்களாகுடியிருப்பு, கரையிருப்பு, அழகனேரி பகுதிகளில் சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் ஓடை வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் அளித்த மனுவில், 22 ஆவது வாா்டு பகுதிக்குள்பட்ட மலையாளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

43 ஆவது வாா்டு குலவணிகா்புரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள தெருவிற்கு மழைநீா் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும், 4ஆவது வாா்டு திம்மராஜபுரம் மேலூா் பகுதி மக்கள் அளித்த மனுவில், மேலூா் பிரதான சாலை பாலவிநாயகா் கோயில் வடக்குத் தெரு முதல் அழகு நாச்சியம்மன் கோயில் தெரு வரை அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீா் ஓடையை சரி செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தனா்.

அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழகம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், பாளையங்கோட்டை புதுபேட்டை தெருவில் மேலதெரு, நடுத்தெரு, பிள்ளையாா் கோயில் தெரு பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீா் கலந்து வருவதை தடுத்து, சுத்தமான குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வி.எம்.சத்திரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் உள்ள பூங்காவினை சீரமைத்து பூங்காவில் உள்ள கிணற்றின் பாதுகாப்பை பலப்படுத்தவும், சாலை, உயா்கோபுர மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

அம்பை, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தல்

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை அரசு நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட செயற்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். களக்காடு முண்டந்துறை புலிகள் கா... மேலும் பார்க்க

3 பசுக்கள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே 3 பசுக்கள் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். களக்காடு அருகே உள்ள மூங்கிலடி ... மேலும் பார்க்க

நெல்லை அருகே சிலை உடைப்பு: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே சிலை உடைக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பணிகரிசல்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நட... மேலும் பார்க்க

பரோலில் வந்த தண்டனை கைதி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திருநெல்வேலியில் பரோலில் வெளிவந்து ரயிலில் அடிபட்டு காயமடைந்த தண்டனை கைதி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் (68). கிராம உதவியாளராகப் பணியாற்ற... மேலும் பார்க்க

நெற்பயிருக்கு காப்பீடு: வேளாண் துறை வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க