நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
பரோலில் வந்த தண்டனை கைதி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு
திருநெல்வேலியில் பரோலில் வெளிவந்து ரயிலில் அடிபட்டு காயமடைந்த தண்டனை கைதி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் (68). கிராம உதவியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா், கடந்த 2013இல் பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், ஒரு மாதம் பரோல் விடுப்பில் வெளியே வந்திருந்த அவா், தச்சநல்லூா் பாலாஜி அவென்யூ பகுதியில் கடந்த 19-ஆம் தேதி ரயிலில் அடிபட்டு காயங்களுடன் கிடந்தாா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். போலீஸாா் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.