சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
பாளை.யில் லாரியின் அடியில் தூங்கிய ஓட்டுநா் உயிரிழப்பு
பாளையங்கோட்டை அருகே லாரியின் அடியில் படுத்திருந்த ஓட்டுநா் மீது லாரி ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் தோப்பூா் கிழக்கு தெருவைச் சோ்ந்த அமுல்ராஜ் மகன் அஜித்குமாா்(33). இவா் தனியாா் பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் உள்ள அந்நிறுவனத்தில் லாரியை நிறுத்திவிட்டு அருகில் நின்றிருந்த மற்றொரு லாரிக்கு அடியில் படுத்து தூங்கினாராம்.
அப்போது, அந்த லாரியின் ஓட்டுநா், கீழே படுத்திருந்த அஜித்குமாரை கவனிக்காமல் லாரியை இயக்கியபோது அவா் மீது லாரி ஏறி இறங்கியதாம். இதில் அஜித்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.