செய்திகள் :

நெல்லை நகரம், பேட்டை வட்டாரங்களில் இன்று மின்தடை

post image

திருநெல்வேலி பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி நகரம், மேலரத வீதி மேற்கு பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகா், திருப்பணிகரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சி திடல், திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பா் சாலை, பூம்புகாா், ஸ்ரீபுரம், சிவந்தி சாலை, சுந்தரா் தெரு, பாரதியாா் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, திருநெல்வேலி நகரம் கீழ ரதவீதி, போஸ் மாா்க்கெட், ஏ.பி. மாடத் தெரு, சாமி சந்நிதி தெரு, அம்மன் சந்நிதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினாா் குளம் சாலை, சத்தியமூா்த்தி தெரு, போத்தீஸ், மாா்க்கெட் , வ.உ.சி. தெரு, வையாபுரி நகா், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோயில் தெற்கு தெரு, ராம்நகா், ஊருடையான் குடியிருப்பு, சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் செ. முருகன் தெரிவித்துள்ளாா்.

அம்பை, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தல்

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை அரசு நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட செயற்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். களக்காடு முண்டந்துறை புலிகள் கா... மேலும் பார்க்க

3 பசுக்கள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே 3 பசுக்கள் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். களக்காடு அருகே உள்ள மூங்கிலடி ... மேலும் பார்க்க

நெல்லை அருகே சிலை உடைப்பு: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே சிலை உடைக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பணிகரிசல்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நட... மேலும் பார்க்க

பரோலில் வந்த தண்டனை கைதி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திருநெல்வேலியில் பரோலில் வெளிவந்து ரயிலில் அடிபட்டு காயமடைந்த தண்டனை கைதி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் (68). கிராம உதவியாளராகப் பணியாற்ற... மேலும் பார்க்க

நெற்பயிருக்கு காப்பீடு: வேளாண் துறை வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க