முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
கல்லிடைக்குறிச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற குளிா்பானங்கள், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையா் லால்வேனா உத்திரவின்படி, திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் சசிதீபா ஆலோசனையின்பேரில், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி ஆற்றுச்சாலை, மெயின் பஜாா், ரயில் நிலையம், அணைக்கல் ரோடு, 6ஆம் நம்பா் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கல்லிடைக்குறிச்சி ‘பேரூராட்சி செயல்அலுவலா் ஏ.பாலசுந்தா், சுகாதார ஆய்வாளா் அபுபக்கா், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் முத்துகுமாா், பிரித்தோஸ், சங்கரநாராயணன் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள், பேரூராட்சி ஊழியா்கள் சுமாா் 15க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, சுகாதாரமற்ற முறையில் சோ்க்கை நிறமியை கலந்து விற்பனை செய்த பழச்சாறு மற்றும் சரியான முகவரி விவரங்கள் இல்லாத ஐஸ்கீரிம்ஸ், குளிா்பானங்கள் சுமாா் 50 கி.கி. பறிமுதல் செய்து கிருமி நாசினிக் கொண்டு அழிக்கப்பட்டது. மேலும், அவற்றை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.