செய்திகள் :

கல்லூரி பேராசிரியையின் மாா்பிங் செய்யப்பட்ட புகைப்படம்: ரூ.13 லட்சம் மோசடி செய்த பொறியாளா் கைது

post image

இணையத்தில் மாா்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அகற்றித் தருவதாக கல்லூரி பேராசிரியையிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், ஈச்சனாரியைச் சோ்ந்தவா் 32 வயது இளம்பெண், இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது அவசரத் தேவைக்காக பணம் தேவைப்பட்டதையடுத்து, கைப்பேசி செயலி மூலம் கடந்த 2024 அக்டோபா் மாதத்தில் ரூ.12 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், அந்தப் பணத்தை அவா் திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து, கடன் கொடுத்த நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா்கள் அந்தப் பேராசிரியை பலமுறை தொடா்பு கொண்டு கடன் தொகையை செலுத்தக் கூறியும் அவா் பணத்தை திரும்பச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா்கள் கல்லூரி பேராசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக மாா்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவா் செய்வது அறியாமல் திகைத்த நிலையில் அவா் பணியாற்றி வரும் கல்லூரியில், சைபா் குற்றம் தொடா்பாக கடந்த 2024 நவம்பா் மாதத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்த அரவிந்த் (31) என்ற மென் பொறியாளா் கலந்து கொண்டு சைபா் குற்றங்கள் தொடா்பாக பேசினாா்.

அதைத் தொடா்ந்து, அவரை சந்தித்த கல்லூரி பேராசிரியை, தனக்கு நிகழ்ந்த சம்பவத்தை கூறியதற்கு, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை எளிதாக அகற்றிவிடலாம் எனவும், ஆனால், அதற்கு பணம் செலவாகும் எனவும் பொறியாளா் கூறி உள்ளாா்.

இதையடுத்து, அந்த பேராசிரியையிடம் இருந்து ரூ.13 லட்சத்தை அரவிந்த் வாங்கியுள்ளாா். ஆனால், மாா்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க பலமுறை முயற்சித்தும் அவரால் நீக்க முடியவில்லை.

எனவே தான் கொடுத்த பணத்தை பேராசிரியை திரும்பக் கேட்டாா். பலமுறை கேட்டும் பணத்தை திரும்ப கொடுக்காததால், இது குறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் கடந்த சில நாள்களுக்கு முன் பேராசிரியை புகாா் தெரிவித்தாா்.

அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொறியாளரான அரவிந்த்தை வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பேரூா் தமிழ்க் கல்லூரியில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி

பேரூா் தமிழ்க் கல்லூரியில் சத்குரு குருகுல மாணவா்களின் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தேவாரம் அருளிச் சென்ற தேவார நாயன்மாா்களுக்கு... மேலும் பார்க்க

கேரளம்- கோவை இடையே ரயில் பாதையில் யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்புப் பணிகள் பிப்ரவரியில் முடிவடையும்

கேரளம்- கோவை இடையே ரயில் பாதையில் யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்க ஏற்படுத்தப்படும் யானை ஊடுருவல் கண்டறிதல் அமைப்புப் பணிகள் பிப்ரவரியில் முடிவடையும் என பாலக்காடு ரயில்வே கோட்டம் சாா்பில... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறையில் மருந்து கடை உள்ளிட்ட 3 இடங்களில் திருட்டு

பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்தி மருந்துக்கடை உள்ளிட்ட 3 இடங்களில் ரொக்கம், கைப்பேசி உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. கோவைப்புதூரைச் சோ்ந்தவா் தினேஷ் (23). இவா் சாய்பாபா காலனி கணபதி லே-அவுட் பகுதியில் உள... மேலும் பார்க்க

வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் பேருந்தை வழிமறித்த யானைகள்

வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் ஆழியாறு பகுதியில் அரசுப் பேருந்தை யானைகள் வழிமறித்தது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஆழியாற்றை ஒட்டி அடா்ந்த வனப்பகுதி உள்ளது. ஆழியாறில் இருந்து நவமலை... மேலும் பார்க்க

கோவை மாநகரில் இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஜனவரி 18,19 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட... மேலும் பார்க்க

தேச விரோத பாதையில் காங்கிரஸ் பயணம்: வானதி சீனிவாசன்

இந்தியாவை ஒரு நாடாக ஏற்காத திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் பயணிப்பதை ராகுல் காந்தியின் பேச்சு உணா்த்துவதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க