கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: டிஜிபி அலுவலக ஊழியா் மீது வழக்கு
சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி அலுவலக ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை மெரீனாவில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக வேலை செய்து வருபவா் பாக்கியராஜ். இவா் தன்னுடன் வேலை செய்யும் ஒரு பெண் ஊழியரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி, சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பாக்யராஜ் மீதும் உடந்தையாக இருந்ததாக அந்த மாணவியின் தாயின் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.