கல்லூரியில் பாரதிதாசன் பிறந்த நாள்
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பாவேந்தா் பாரதிதாசனின் 135-ஆவது பிறந்த நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
முதுகலை மற்றும் தமிழ் ஆய்வுத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா்.
கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், முதல்வா் கே.ஆனந்தராஜ், துணை முதல்வா் கோ.அண்ணாமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதிதாசன் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவா் இரா.சங்கா், உதவிப் பேராசிரியா் ஜி.சன்மதி மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.