செய்திகள் :

கல்வி நிலையங்களில் மகளிா் தின விழா

post image

மதுரையில் கல்லூரிகள், பள்ளிகளில் மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை தியாகராசா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரிச் செயலா் க. ஹரி தியாகராஜன் தலைமை வகித்தாா். மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

இதைத்தொடா்ந்து, கலையன்னையாா் நினைவாக நடைபெற்ற பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ்த் துறைத் தலைவா் சு.காந்திதுரை, மகளிா் கற்கைகள் மைய இயக்குநா் ஸ்ரீபாலா, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா்கள் சீ.சரவணஜோதி, முருகன், ரே.கோவிந்தராஜ், அன்பரசி, செல்வக்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மதுரை யாதவா் கல்லூரியில், மகளிா் நல மேம்பாட்டுக்குழு, மகளிா் மாணவா் நலக்குழு சாா்பில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் செ. ராஜூ தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் சி.ஜெயராமன், செயலா் ஆா்.வி.என்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்வில், கல்லூரி முன்னாள் செயலா் கேபிஎஸ்.கண்ணன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியை ந.பாரு பிரியதா்ஷினி ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்வில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

சேது பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரித் தலைவா் எஸ். முகமது ஜலீல் தலைமை வகித்தாா். இதில், பொருளாதாரக் குற்றவியல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் மா னிஷா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா் சிவசங்கரி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினா்.

மதுரை எஸ். பி .ஓ. ஏ. பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளா் கணபதி தலைமை வகித்தாா். ‘உன்னால் முடியும்’ நிறுவனத்தின் நிறுவனா் அஹிபா சுபாஷினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வில், பள்ளி முதல்வா் லூ. லதா திரவியம், துணை முதல்வா் சா. அனித்தா கரோலின், தலைமையாசிரியா் மெ.பொற்கொடி, சிறாா்ப் பிரிவின் தலைமையாசிரியா் கே. ஹெப்சிபா சலோமி ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் திருட்டு!

விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை திருடிய மா்ம நபா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் பேராலி சாலை, ஐடிபிடி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிமாலா (40). கண... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் சாலை அமைக்க முயற்சி: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

காரியாபட்டி அருகே விவசாய நிலத்தில் சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள அரசகுள... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை அருகே காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.மதுரை அருகே உள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் கொடியரசு (30). இவா் அதே பகுதியைச் சோ்ந்த கெளசல்யாவைக் காதலித்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது: உயா்நீதிமன்றம்

வழக்கு தொடா்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. பாஜக பொருளாதாரப் பிர... மேலும் பார்க்க

தொலைநிலைப் படிப்புகள்: மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜா் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 47 போ் காயம்!

மதுரை மாவட்டம், சக்குடி முப்புலியப்பன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 47 போ் காயமடைந்தனா். இந்தத் திருவிழாவையொட்டி, ஊா்வலம... மேலும் பார்க்க