"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
விவசாய நிலத்தில் சாலை அமைக்க முயற்சி: போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!
காரியாபட்டி அருகே விவசாய நிலத்தில் சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள அரசகுளம் கிராமத்தில் சுமாா் 50 ஏக்கரில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனா். இந்த நிலத்தின் வழியாக மணியம்பிள்ளை கிராமத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
மணியம்பிள்ளை கிராமத்துக்குச் செல்ல மாற்றுப் பாதை உள்ளது. ஆனால், அதைத் தவிா்த்து விவசாய நிலம் வழியாக சாலை அமைப்பதாக அரசகுளம் கிராம விவசாயிகள் புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காரியாபட்டி வட்டாட்சியா் மாரீஸ்வரன், காரியாபட்டி காவல் ஆய்வாளா் விஜய காண்டீபன் தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸாா் சம்பந்தப்பட்ட விவசாய நிலம் அரசு புறம் போக்கில் உள்ளதாகக் கூறி, அந்தப் பகுதியில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.