கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைத...
களக்காடு தலையணை, நம்பி கோயில் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோயில் பகுதிகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடையை வனத்துறை விலக்கிக்கொண்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் களக்காடு கோட்டத்துக்குள்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி காரணமாக வியாழன் முதல் திங்கள்வரையிலான (ஏப். 24 - 28) 5 நாள்களுக்கு தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி, நம்பிகோயில் பகுதிக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக, வனத்துறையினா் புதன்கிழமை தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், இப்பகுதிகளுக்கு வந்துசெல்ல விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக வனத்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இதனால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.