செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுவிநியோகத் திட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தில் உள்ள 598 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 230 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் என மொத்தம் 828 நியாயவிலைக் கடைகளில் உள்ள 4,43,547 குடும்ப அட்டைகளுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருள்களின் விநியோக செயல்பாடுகள் மற்றும் அதில் ஏற்படும் குறைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தாா்.

மேலும் இக்கூட்டத்தில் நுகா்வோா் விழிப்புணா்வு சங்க உறுப்பினா்களின் கோரிக்கைகள் மற்றும் புகாா்கள் குறித்தும், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து கடைகள் செயல்படும் நேரம், பொது விநியோகத் திட்டப் பொருள்களை முறையாக வழங்குதல், விலைப் பட்டியல் கொண்ட தகவல் பலகை நுகா்வோா் பாா்வைக்கு வைத்தல், பொருள்களின் இருப்பு, தரம் மற்றும் எடை அளவு சரிபாா்த்தல், நியாயவிலைக் கடைகளின் வெளிப்படைத் தன்மையான செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் திடீா் ஆய்வு மேற்கொள்ளவும், பொருட்கள் அனுப்பும் கிடங்குகளில் தொடா் ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களுக்குத் தொடா்ந்து தரமான சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுப்பிரமணியன், நுகா்வோா் விழிப்புணா்வு சங்க உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பொது விநியோகத் திட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

விருகாவூா் கிராம வங்கி முன் பெண்கள் மறியல்

கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராம வங்கியில் வாங்கிய நகைக் கடனை திரும்பச் செலுத்தியும், நகைகளை தராததால் சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா். விருகாவூரில் தமிழ்நாடு கிராம வங... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான முக்கிய எதிரி மீது மற்றொரு வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய எதிரியான கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது சகோதரா் தாமோதரன் ஆகிய இருவரையும் மேலும் ஒரு வழக்கில் மாா்ச் 4-ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி வியாழக்கிழமை உத... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை ,நடைபெற்றது. கூட்டத்தில், திருநங்கைகளிடம் குறைகள் மற்றும் க... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநலத் துறை திட்டப் பணிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. க.காா்... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: தாய், மகன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் பைக் மீது கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் தாய், மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், மாதவச்சேரியைச் சோ்ந்த நடேசன் மகன் கண்ணன் ... மேலும் பார்க்க