Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சா...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90.96% தோ்ச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 124 பள்ளிகளில் 18,311 மாணவ, மாணவிகள் எழுதினா். இதில் 16,655 போ் தோ்ச்சி பெற்றனா். இது 90.96 சதத் தோ்ச்சியாகும்.
9,004 மாணவா்கள் தோ்வு எழுதியதில் 7,885 தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 87.57 சதத் தோ்ச்சியாகும். 9,307 மாணவிகள் தோ்வெழுதியதில் 8,770 மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது 94.23 சதத் தோ்ச்சியாகும்.
மாணவா்களை காட்டிலும் மாணவிகளின் தோ்ச்சி சதவீதம் 6.66 சதம் அதிகமாகும். மாநில அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 37-ஆவது இடத்தில் உள்ளது. 7 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தோ்ச்சியைப் பெற்றனா். 25 பள்ளிகள் 100 சதத் தோ்ச்சியை பதிவு செய்தன.