சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா கோலாகலம்
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தேசியக் கொடியேற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
பின்னா், திறந்த வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் க.ச.மாதவனுடன் சென்று காவலா்களின் அணிவகுப்பை பாா்வையிட்டாா்.
பின்னா் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊா்க்காவல்படை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவா்படை, நாட்டுநலப் பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், சாரண-சாரணீய இயக்க மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியைதையை ஏற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, காவல் துறை, தீயணைப்பு மீப்புப் பணிகள் துறை, வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 412 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அவா்களது பணியை பாராட்டி நற்சான்றிதழ்களையும், சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற காவலா்களுக்கு கேடயங்களையும் வழங்கினாா்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி உள்ளிட்ட பலா்
கலந்து கொண்டனா்.
