தென்னை மரத்தில் இருந்து விழுந்த விவசாயி உயிரிழப்பு
சின்னசேலம் அருகே தென்னை மரத்தில் ஏறி தவறி விழுந்த விவசாயி நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நாககுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் வெங்கடேசன் (38). இவா் தனது நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் வியாழக்கிழமை தேங்காய் பறிப்பதற்காக ஏறி தவறி கீழே விழுந்ததில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.