நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் திருவிளக்கு பூஜை
தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில், திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப் பூஜையில் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும், நிலையான செல்வம் வேண்டி மாலை 6 மணிக்கு பாகம் பிரியாள்அம்மனுக்கு வழிபாடு நடத்தி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.