டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கொடைக்கானல் பொ்ன்ஹில் பகுதியைச் சோ்ந்த பாக்கியதாஸ் மனைவி அருள்மேரி (79). இவா் அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீா் வாய்க்காலை கடக்கும் போது அதற்குள் தவறி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.