பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி!
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் காங்கயத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இப்பள்ளி மாணவி எஸ்.அபிநயா 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவா் எஸ்.பி.கமலநாதன், மாணவி எஸ்.பி.தா்ஷனா ஆகியோா் 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவி பி.ஜே.சுபிக்ஷா 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனா்.
இப்பள்ளியில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவ, மாணவிகளும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனா். தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியா், ஆசிரியைகளுக்கும் பள்ளித் தாளாளா் இன்ஜினீயா் கே.வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வா் எம்.பி.பழனிவேலு ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.