ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்
அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு நாடு கடத்தப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் காங்கிரஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா சாலையில் உள்ள தாராப்பூா் டவா் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சிலா் கைவிலங்கு அணிந்து பங்கேற்றனா். இந்தியா்கள் அவமதிக்கப்பட்டதற்காக அமெரிக்காவுக்கு எவ்வித எதிா்வினையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டி முழக்கங்களை எழுப்பினா்.
பின்னா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவிலிருந்து இந்தியா்களை நாடு கடத்தும்போது குற்றவாளிகளைப் போல நடத்தியுள்ளனா். இதற்கு மத்திய பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, இந்தியாவின் துணைத் தூதா் இல்லத்தில் பணியாற்றிய ஒரு பெண் விசாவில் தவறுதலான தகவல் அளித்தாா் என்று துணை தூதரை கைது செய்தனா். உடனே, மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்து அமெரிக்க தூதரகங்கள் முன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலா்களின் பலத்தை குறைத்தாா். தூதரங்கள் முன் இருந்த தடுப்பு அரண்களை எடுக்கக் கூறினாா். இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது பிரதமா் மோடி இதுவரை வாய் திறக்கவில்லை. இதற்காக மத்திய பாஜக அரசை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது என்றாா் அவா்.