காங்கோ: 130 நோயாளிகள் கடத்தல்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் மருத்துவமனைகளில் இருந்து சுமாா் 130 நோயாளிகளைக் கடத்திச் சென்றனா். காங்கோ ராணுவ வீரா்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவா்களை கிளா்ச்சியாளா்கள் கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.
காங்கோவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தீவிர தாக்குதல் நடத்தி பல முக்கிய பகுதிகளை எம்23 படையினா் கைப்பற்றி வருகின்றனா். அவா்களுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான மோதலில் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதாக பிரதமா் ஜூதித் சுமின்வா டுலுகா தெரிவித்துள்ளாா்.