சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கீழ்வேளூா்: கீழ்வேளூா் வட்டம், கீழக்காவலக்குடி காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த 4-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து பஞ்சகவ்ய பூஜை, கோ பூஜை, லெஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனத்தோடு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
திங்கள்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, பூா்ணாஹூதி தீபாராதனை காட்டப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து கோயில் விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவா் மற்றும் காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக, சுந்தர விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.