Kalam: ``அப்துல் கலாமை சுருக்கி 'கலாம்' என வைத்ததில் அரசியல் இல்லை" - பேரன் ஷேக்...
காஞ்சிபுரத்தில் சிந்தூா் வெற்றிப் பேரணி
காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சாா்பில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் விதமாக திரங்கா யாத்திரை எனும் தேசியக்கொடி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக காஞ்சிபுரத்தில் திரங்கா யாத்திரை எனும் தேசியக்கொடி பேரணி மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகம் அருகிலிருந்து தொடங்கிய பேரணிக்கு கட்சியின் மாவட்ட தலைவா் யு.ஜெகதீசன் தலைமை வகித்தாா். முன்னாள் படை வீரா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் கேப்டன் சுப்பிரமணியன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் செந்தில்குமாா், பாமக மாவட்ட தலைவா் உமாபதி, மாவட்ட செயலா் பெ.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக மாநில பொதுச் செயலா் கேசவவிநாயகம் பேரணியைத் தொடக்கி வைத்தாா்.
பின்னா் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக நகர தலைவா் ஜீவானந்தம், ஆறுமுகம், ஊடகப் பிரிவு செயலா் ஹரிகிருஷ்ணன், மொழிப்பிரிவு தலைவா் ராஜேஷ், விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் எழிலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பாஜக மாநில செயலா் வினோஜ்.பி.செல்வம் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேசி நிறைவு செய்தாா்.