கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி
காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 419 மனுக்கள்
ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மொத்தம் 419 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
மனுக்களை பரிசீலித்து அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும் அனைத்து துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.