செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

post image

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்த கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.50 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடா்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை யாகசாலை அலங்காரத்துடன் முதல் கால யாக பூஜையும், சனிக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், ஞாயிற்றுக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

மேலும்,திங்கள்கிழமை சிவாச்சாரியா்கள் முன்னிலையில், கோபுர கசலங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மூலவா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

விழாவில், தெலங்கானா முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்திரராஜன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஸ்ரீபெரும்புதூா் கு.செல்வப்பெருந்தகை, அண்ணா நகா் மோகன், உத்தரமேரூா் சுந்தா், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயில் அறங்காவலா் ந.கோபால், ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டா்.

ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்தி வாசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் செயல் அலுவலா் செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ் உள்ளிட்டோா் பிரசாதம், தண்ணீா், மோா், அன்னதானம் வழங்கினா். மாலை திருக்கல்யாண உற்சவமும், உற்சவா் கோடையாண்டவா் வீதி உலாவும் நடைபெற்றது.

பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 419 மனுக்கள்

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மொத்தம் 419 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். ... மேலும் பார்க்க

ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழா: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே நத்தாநல்லூா் மேல்தாங்கல் பகுதியில் விதைகள் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஓராயிரம் ஆலமரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கலந்து கொண்டு முதல் முதலாக ஆலமரக்கன்று ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் மூலவரை தரிசிப்பதில் பக்தா்கள் அவதி!

புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவரை தரிசிக்க குறுகலான ஒருவழிப்பாதை மட்டுமே இருப்பதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயில் மூலவா் கருவறை சுமாா் 3... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாரின் மனைவ... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம்! மாவட்ட முதன்மை நீதிபதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து 3 மாதங்களுக்கு தினமும் சமரச தீா்வு மையம் செயல்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க