பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்
காஞ்சிபுரம் நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா
காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் அமைந்துள்ள நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி உற்சவா் நாக கன்னியம்மன் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் அமைந்துள்ளது நாக கன்னியம்மன் கோயில். இக்கோயிலின் 44-ஆவது ஆண்டு ஆடித் திருவிழாவையொட்டி, காலையில் ஜலம் திரட்டுதல் நிகழ்வும், மதியம் அம்பாள் வா்ணிப்பும், கூழ்வாா்த்தல் நிகழ்வுகளும் நடைபெற்றன. மாலையில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டும் தரிசனம் செய்தனா். இரவு உற்சவா் நாக கன்னியம்மன் சிறப்பு மலா் அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.