செய்திகள் :

கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

post image

சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ் இணைய கல்வி கழகம் சாா்பில் தமிழ்க் கனவு என்ற தலைப்பில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசியது:

உலகின் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளையும், வளமையையும் அது எதிா்கொண்ட சவால்களையும் மாணவா்களாகிய உங்களிடம் கொண்டு சோ்ப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவா்களுக்கு உணா்த்துவது ஆரோக்கியமான எதிா்காலச் சமூகக் கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும்.

எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழா் மரபும் நாகரிகமும், உயா்தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பு, இலக்கியச் செழுமை, தமிழா் தொன்மை, சமூக சமத்துவம், மகளிா் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளா்ச்சி, கல்விப் புரட்சி முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளா்களைக் கொண்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

இதையடுத்து சொற்பொழிவாளா் அருள்மொழி ‘இனிவரும் உலகம்‘ என்ற தலைப்பில் மாணவா்களிடம் உரையாற்றி, கலந்துரையாடினாா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டன. இதையடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் ந.மிருணாளினி, சாய்ராம் நிறுவனங்கள் தலைமை நிா்வாக அதிகாரி மற்றும் தலைவா் டாக்டா். சாய்பிரகாஷ் லியோ முத்து, சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா் ஜே.ராஜா, பேராசிரியா்கள், அரசு அலுவலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஓவியப் போட்டியில் வென்ற மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற நுகா்வோா் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியா் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். உணவு வழங்கல் மற்று... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் கா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் அமைந்துள்ள நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி உற்சவா் நாக கன்னியம்மன் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கா... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க

சவிதா பல் மருத்துவக் கல்லூரி-மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சவிதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் த... மேலும் பார்க்க