செய்திகள் :

காஞ்சிபுரம்: ரௌடி மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - துரோகம் செய்ததாக உறவினர் கொடூரக் கொலை

post image

காஞ்சிபுரம் மாவட்டம், விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரௌடி லூவியரசன் (வயது 34). இவரின் மனைவி கீர்த்தனா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், லூவியரசனின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞன் அருண்குமார் என்பவருடன் லூவியரசனின் மனைவி கீர்த்தனாவுக்கு திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஹெச்.எஸ் எனும் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான லூவியரசன் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாவது, கைதாகி சிறைச் செல்வது என வீடு தங்காமல் இருந்திருக்கிறார்.

ரௌடி லூவியரசன்

இதனால், லூவியரசனின் வீட்டுக்கே சென்று அவரின் மனைவியுடன் சிரித்துப்பேசி திருமணம் மீரிய உறவில் ஈடுபட்டுவந்திருக்கிறார் உறவினர் அருண்குமார். மனைவியின் நடத்தைக் குறித்து ரௌடி லூவியரசனுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, தனக்குத் துரோகம் இழைத்த உறவினர் அருண்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் லூவியரசன். அதன்படி, நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகிலுள்ள ஆலப்பாக்கம் பகுதியிலிருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றுவரலாம் எனக்கூறி அருண்குமாரை பைக்கில் அழைத்துகொண்டு வந்திருக்கிறார் லூவியரசன்.

கொடூர கொலை

ஆலப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் ஜல்லி மெஷின் அருகே வந்தபோது பைக்கை நிறுத்திவிட்டு லூவியரசன் மது குடித்திருக்கிறார். கோயிலுக்கு மாலை அணிந்திருந்ததால் அருண்குமார் மது குடிக்காமலிருந்திருக்கிறார். போதை ஏறியதும், தனது மனைவியுடனான உறவு கேட்டு அருண்குமாரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் லூவியரசன்.

ஏற்கெனவே திட்டமிட்டபடி, அருண்குமாரை கொடூரமாகத் தாக்கி கழுத்தை துணியால் இறுக்கியிருக்கிறார். மூச்சு நின்று நிலைகுலைந்து சரிந்த அருண்குமாரை ஆத்திரம் தீரும் வரை கத்தியால் குத்தினார் லூவியரசன்.

கொலை
கொலை

கழுத்தையும் அறுத்து, ஆணுறுப்பையும் வெட்டினார். இந்த கொடூரத் தாக்குதலில் அருண்குமார் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, லூவியரசன் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொல்லப்பட்டுக் கிடந்த அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக ரௌடி லூவியரசனை கைது செய்த போலீஸார், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

ஆவடி: பைக் திருட்டு வழக்கு; புகாரளித்த பெண்ணை விடுதிக்கு அழைத்த காவலர்.. சிக்கிய பின்னணி

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், வேலை நிமித்தமாக ஆவடி செக்போஸ்ட் பகுதிக்கு தன்னுடைய டூவிலரில் வந்திருக்கிறார். அந்தப்பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றவர், பின்னர் திரும்பி... மேலும் பார்க்க

"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து கைதுசெய்த போலீஸார்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த படியூரில் சாமிநாதன் என்பவர் புதிதாக கடைகள் கட்டியுள்ளார். இந்தக் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷிடம் கடந்த 4 மாதங்களுக்கு... மேலும் பார்க்க

குன்னூர்: வெங்காய மூட்டைகளுக்குள் பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்டுகள் - சிக்கியது எப்படி?

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தடை ஏதுமின்றி விற்பனை நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் கட்டுப... மேலும் பார்க்க

கேரளா: கோயில் வளாகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; தட்டிக் கேட்ட சிறுவனைக் கொன்ற இளைஞருக்கு ஆயுள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த காட்டாக்கடை அருகே உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஷீபா கேரளா தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலையில் முகம் சிதைந்து சடலமாகக் கிடந்த காவலாளி; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குகன்பாறையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு ஆலையில், இரவு நேரக் காவலாளியாகத் தூத்துக்குடி... மேலும் பார்க்க

கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எ... மேலும் பார்க்க