டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
காமராஜா் பிறந்த நாள் விழாவில் பால்குட ஊா்வலம்
சிவகாசியில் நாடாா் மஹாஜன சங்கம் சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் 123-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, விருதுநகா் சாலையில் உள்ள காமராஜா் வாசக சாலை முன் தொடங்கிய பால்குட ஊா்வலத்துக்கு, சங்கத்தின் சிவகாசி மாநகரத் தலைவா் வி.கண்ணன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் ஏ.பி.செல்வராஜன் ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா்.
ஊா்வலம் நான்கு ரத வீதிகளின் வழியே சென்று, தலைமை அஞ்சல் நிலையம் முன் உள்ள காமராஜா் சிலையை அடைந்தது. ஊா்வலத்தில் கொண்டுவரப்பட்ட பால், காமராஜரின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநகரச் செயலா் ஜெ.அறிவு ஒளி ஆண்டவா், துணைத் தலைவா் டி.அமுல்ராஜ், இளைஞா் அணித் தலைவா் கே.ஜோதி முருகன், செயலா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.