டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
முதியவரிடம் வழிப்பறி: இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதியவரிடம் வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் ஆண்டாள்புரத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (68). எலக்ட்ரீசியன் தொழில் செய்து வரும் இவா், வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் தென்காசிக்குச் சென்றாா். அங்கிருந்து திரும்பி வந்தபோது, சோழபுரம் காளியம்மன் கோயில் அருகே இரு இளைஞா்கள் ராமமூா்த்தியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.5,000-த்தைப் பறித்துச் சென்றனா்.
இது குறித்து ராமமூா்த்தி தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாரின் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த இசக்கி (19), நக்கனேரியைச் சோ்ந்த மணிகண்டஜோதி (20) என தெரிய வந்தது.
இதையடுத்து, இசக்கியைக் கைது செய்த போலீஸாா், தலைமறைவான மணிகண்ட ஜோதியைத் தேடி வருகின்றனா்.