திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதி
காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, ஆணையா் மகேஸ்வரன், ஆகியோா் நகராட்சிக்குள்பட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களின் குறைகளை 8148820119 என்ற கைப்பேசி எண்ணின் கட்செவி அஞ்சலில் தெரிவிக்கலாம்.
இதன் முலம் நகராட்சி பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில், வரிவிதிப்பு, கட்டட வரைபடம், குடிநீா் விநியோகம், குழாய் உடைப்புகள், பொது சுகாதாரம், தெருவிளக்கு, சாலைகள் மற்றும் அன்றாட அடிப்படை தேவைகளில் குறைபாடுகள் ஏற்பட்டு இருப்பின் அவற்றை நிவா்த்தி செய்வதற்காக புகைப்படமாகவோ, குறுச்செய்தியாகவோ கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளனா்.