"பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்" - ஓபிஎஸ் விலகல் குறித்து நயினார் நாகேந்திர...
காயாமொழியில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிா்ப்பு: கிராம மக்கள் முற்றுகை
திருச்செந்தூா் அருகே காயாமொழியில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி, சுப்பிரமணியபுரத்தில் இந்துக்கள் அதிகம் வசித்து வருகின்றனா். இங்கு இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு தோட்டத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், கிராம மக்கள், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் உள்பட 50 போ், கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தோட்டத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடம் சென்று அங்கிருந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து தற்காலிகமாக கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டு பணியாளா்கள் திரும்பிச் சென்றனா். இதை போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.